Wednesday 29 April 2020

காரைக்குடி கம்பன் கழகத்தின் கண்ணீர் அஞ்சலி


கம்பன் அடிப்பொடி ஐயா சா. கணேசன் அவர்களோடு கரம் கோர்த்து கம்பன் விழாவை நடத்தியோர் பலர். பொருளாலும், செயலாலும் கம்பன் தமிழ் தழைக்க உழைத்தோர் பலர்.
அவருள்ளும் ஒருவர்
திரு. லெ. கணேசன் என்ற பெரியவர்.
கம்பன் மேடையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காலக்கணக்கினைக் கணக்கிடும் அரிய பணியைக் கம்பன் அடிப்பொடியார் காலத்திலும் அதற்குப் பின்பும் செய்து வந்தவர்.
இவரன்றி மேடையில் சிவப்பு விளக்கு எரியாது. இவரே அதன் இயக்குநர். சரியான நேரத்தில் சரியாக நேர வரையறை செய்த பெருந்தகை. இவரைக் கண்டால் அனைவரும் சிவப்பு விளக்கும் இவரது நேரக்கட்டுப்பாடும் நினைவிற்கு வரும். அயராது பணி செய்த அவரின் பணி பாராட்டுக்கு உரியது.
இலக்கிய மேடையைக் காலத்தால் கணித்த அவர் நேற்று (28-4-2020) இயற்கை எய்தினார். காரைக்குடி கம்பன் கழகம் அவரின் தன்னேரிலாப் பணிக்குத் தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. காலக் கட்டுப்பாட்டாளருக்கே காலம் கட்டுப்பாட்டை விதிக்கிறது.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரின் இல்லத்தில் (அண்ணாமலை விலாஸ்
மேலமடம் காரைக்குடி) இன்று மதியம் நடைபெறுகிறது. அவரின் இழப்பில் வாடும் குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

Tuesday 7 April 2020

கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் போற்றும் நாள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் போற்றும் நாள்.

கம்பன்  வாழ்க
கம்பன் புகழ் வாழ்க
கன்னித் தமிழ் வாழ்க
7-4-2020
இன்று பங்குனி  அத்தத் திருநாள்

இன்றைக்கு நாட்டரசன் கோட்டையில் காரைக்குடி கம்பன் கழகத்தினரால் கம்பன் அருட்கோயிலில் வழிபாடு நிகழ்த்தப்பெற்றது. ஆண்டுதோறும் கம்பன்  அடிப்பொடி திரு சா. கணேசனார் அவர்கள்  காட்டிய வழியல் இவ்வழிபாடு நடத்தப்பெற்று வருகிறது. 
 திரு கரிகாலன் பொறுப்பேற்று இதனை நடத்தினார்கள்.அவர்களுக்கும் பூசனை செய்த திரு காசி விசுவநாதன் உள்ளிட்ட பூசனையாளர்களுக்கும் நன்றிகள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்


கம்பன் அருட்கோயிலில் வழிபாடு(Video) 


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Friday 14 February 2020

கம்பன் - புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்


                                                       
          காரைக்குடி கம்பன் கழகம்
நடத்தும்
கம்பன் - புதிய பரிமாணங்கள்
 பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்
கருத்தரங்கம் நடைபெறும்  நாள்:  5.4.2020 (ஞாயிற்றுக் கிழமை)
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம் காரைக்குடி 630 001
 பேரன்புடையீர்

          வணக்கம். 1939ஆம் ஆண்டு கம்பனடிப்பொடி சா. கணேசனால் தொடங்கப் பெற்ற காரைக்குடி கம்பன் கழகம்இ எண்பத்தியிரண்டு ஆண்டு காலமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் திருவிழாவைக் கொண்டாடி வருகிறது. இவ்வமைப்பு ஆண்டுதோறும் முத்தமிழில் துறைபோகிய அறிஞர்களைக் கொண்டு இலக்கிய அரங்குகளை நிகழ்த்தி வருவதுடன் அவ்வப்போது உலகத் தமிழ்க் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. இதுவரை நான்கு உலகத்தமிழ் கருத்தரங்குகள் நடத்தப்பெற்றுள்ளன. இவ்வாண்டு கம்பன் புதிய பரிமாணங்கள் என்ற தலைப்பில் பன்னாட்டுத் தமிழ்க் கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் ஏப்பிரல்  ஐந்தாம் ஆம் நாள் நடத்திட உள்ளது.

கருத்தரங்கத் தலைப்பு
இக்கருத்தரங்கின் தலைப்பு கம்பன் புதிய பரிமாணங்கள்” என்பதாகும்.  தற்கால நிலைக்கு ஏற்றவாறு கம்ப காவியத்தைப் புதிய நோக்குடன் நுணுகி ஆராய்ந்து கருத்துகளை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இக்கருத்தரங்கம் நிகழ்த்தப்பட இருக்கிறது. எனவே அன்பு கூர்ந்து தாங்கள் கம்ப ராமாயணத்தில் காணும் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தும் நிலையில் கட்டுரையை வரைந்தனுப்பிட வேண்டுகிறோம்.

சமுதாயவியல், மானுடவியல், தொன்மவியல், உளவியல், அழகியல், கணக்கியல், வழக்கியல், கவிதையியல், யாப்புநிலை, அணியியல், தத்துவவியல், சித்தாந்தவியல், வேதாந்தவியல்,  காந்தியம், பொதுவுடமை, எதிர்காலவியல், புதிய இலக்கியத் திறனாய்வுப் பார்வைகள் போன்ற பல புதிய பரிமாணங்களைத் தம் கட்டுரையில் வெளிப்படுத்திட வேண்டுகிறோம்.
கட்டுரைகளை அனுப்பும் முறை

            கட்டுரைகள் சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும். கட்டுரைகளை ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருவில்  ஐந்து பக்க அளவில் கணினி அச்சாக்கம் செய்து Kambantamilcentre@gmail.com என்ற மின்னஞ்சலில் மார்ச் பத்தாம் தேதிக்குள் அனுப்பிடவேண்டும். கட்டுரைகள் பரிசீலிக்கப்பட்டபின்பு, ஐஎஸ்பின் எண்ணுடன் கருத்தரங்க நாள் அன்றே வெளியிடப்பெற்றுக் கட்டுரையாளர்களுக்கு வழங்கப்படும்.
கட்டுரை வாசித்தளிப்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். கட்டுரையாளர் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆகியவற்றை கட்டுரையோடு இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.
பதிவுக் கட்டணம்
·         கட்டுரைக்கான பதிவுக் கட்டணம் ரூ 500
·         அயல்நாட்டவர்களுக்கான பதிவுக்கட்டணம் இந்திய மதிப்பில் ரூ 2000

பதிவுக் கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி செலுத்தப்பட்ட ரசீதை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பவும். கட்டுரை, பதிவுக்கட்டணம் பதிவுப்படிவம் இவை இருந்தால் மட்டுமே கட்டுரை பிரிசுரிக்கப்படும்.    
Bank name          : Tamilnadu kirama bank, Karaikudi
Account name     : Kamban Kazhagam
Account No         : 506801000010915
ifsc code              : IOBA0PGB001
கருத்தரங்க தொடர்புகளுக்கு பின்வரும் கருத்தரங்கப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
v  கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்           
v  முனைவர் சொ. சேதுபதி 7904890080
v  முனைவர் செ.செந்தமிழ்ப்பாவை 9944360725
v  முனைவர் மா. சிதம்பரம் 9486326526
v  முனைவர் மு.பழனியப்பன் 9442913985
v  முனைவர் இரா. கீதா 9442857427
v  முனைவர் சொ. அருணன் 790428269


Wednesday 4 December 2019

ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி ஜனவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி மாணாக்கர்களும் கலந்து கொள்ளலாம். அறிவிப்பும் பாடலும் கீழே இணைப்பில் உள்ளது வருக கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்



அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி


காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 4 1 20 அன்றுகாரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் இரண்டரை மணிக்கு நடைபெற உள்ளது கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

Tuesday 30 July 2019

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் 28.7.2015 அன்று கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா நடைபெற்றது. இதில் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மேலும் சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற திருமதி தேவி நாச்சியப்பன் அ்வர்களுக்கும் சிறப்பு செய்யப்பெற்றது.