Tuesday 26 February 2013

மார்ச் 23-24 ஆகிய நாட்களில் காலந்தோறும் கம்பன் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அன்புடையீர்
வணக்கம்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 (சனி), 24 (ஞாயிறு ) ஆகிய இரு நாள்களும் காலந்தோறும் கம்பன் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில்நடைபெற உள்ளது. அனைவரும் வருக.

               கம்பன் ஆய்வுக் கோவை
                கம்பன் தமிழ்க்கோவை
               கம்பன் பன்மணிக்கோவை
என்ற தலைப்பில் மூன்று  கோவைகள் வெளியிடப் பெற உள்ளன. மொத்தம் 250க்கும் மேலான கட்டுரைகளில் இத்தொகுதிகளில் வெளியிடப் பெற உள்ளன.

சனிக்கிழமை காலை கருத்தரங்கத் தொடக்கவிழா, ஞாயிறு மாலை நிறைவு விழா. இந்நிறைவுவிழாவில் இம்மூன்று தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் சிறந்த பத்து கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப் பெற்று அவற்றிற்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட உள்ளன. இக்கட்டுரையாளர்கள் நேரில் வந்து இதனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். நிறைவுவிழாவில் கட்டுரையாளர் இருப்பின் மட்டுமே இப்பரிசு வழங்கப் பெறும்.மேலும் அவர் அரங்கத்தில் கட்டுரை வாசித்தளித்திருப்பது நல்லது. இச்சூழல் அமையாதபோது அடுத்த அடுத்த கட்டுரைகள் தேர்விற்கு உள்ளானதாக எடுத்துக் கொள்ளப் பெறும். இருநாள்களும் முழுமையான வருகையைக் கட்டுரையாளர்கள் தரவேண்டும். தனிப்பட்ட தங்கும் வசதி வேண்டுவோர் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

பொது தங்குமிட வசதிக்கும் ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது.
இருநாள்களும் செட்டிநாட்டு உணவிற்கு ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளதால் தயவு செய்து கட்டுரையாளர்கள் தங்கள் வருகையை உறுதி செய்யவேண்டும்.

இல்லையெனில் உணவிற்கு பங்கு கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம்.

இதுவரை கட்டுரையாளர்களிடம் கட்டுரை தேர்வாகவில்லை என்ற குறிப்பு தொலைபேசி வழியாகவோ, கடித வாயிலாகவோ தெரிவிக்கப் பெற்றிருந்தாலோ  அல்லது கட்டுரை திருப்பியனுப்பப் பட்டுவிட்டாலோ அக்கட்டுரைகள் மட்டும் தொகுதியில் இடம் பெறவில்லை என்பதை அறிந்து கொள்ளவும். மற்றவர்கள் கட்டுரை தொகுதியில் இடம் பெற்றுவிட்டது என்று பொருள்.

தங்கள் கட்டுரை தேர்வு குறித்து மின்னஞ்சலில் மட்டும் தொடர்க.

மற்றதொடர்புகளைத் தவிர்க்க.

மேலும் ஒருவாரம் காரைக்குடி கம்பன் விழா நடைபெற உள்ளது. இதிலும் கட்டுரையாளர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு உணவு, தங்குமிட வசதிக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து கொள்ளத் தொடர்பு கொள்க.

மின்னஞ்சலில் தொடர்க.தயவு செய்து தொலைபேசவேண்டாம்.

அன்புடன்
கம்பன் தமிழாய்வு மையம்