Wednesday 19 March 2014

கம்பன் 2014 உலகத் தமிழ்க் கருத்தரங்கின் விருந்தோம்பல் பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை

காரைக்குடி கம்பன் விழா - விருந்தோம்பல்.
 
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்)  அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி 
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து. 
 
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை; 
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா 
நகரத்தார் காட்டுகிற நல்விருந்  தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.    
 
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித் 
தன்னலம் போக்கிய  தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
 
 
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர் 
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன் 
காரைக்  குடிமக்கள்  காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு. 
   
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி 
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து. 
 
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில் 
நேசமதை  மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.     
 
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான் 
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச் 
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப் 
பன்னினேன் நன்றியுரைப் பா. 
 

வரதராசன். அ.கி.  

Monday 17 March 2014

துறைதோறும் கம்பன் - ஆய்வுக்கோவை வெளிவந்துவிட்டது


கம்பன் தமிழாய்வு மையத்தின் சார்பில் 15-16 (மார்ச்) ஆகிய நாள்களில் நடத்தப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் கம்பன் கருத்தரங்க ஆய்வுக்கோவையின் காட்சி இது. 150 கட்டுரைகள் கொண்ட அருமையான கம்பன் பற்றிய முக்கியமான தொகுப்பு
வேண்டுவோர் பெற மின்னஞ்சல் செய்க.

காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையத்தின் இரண்டாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கின் காட்சிகள்


கம்பன் திருநாள் (2014 ) காட்சிகள்


கம்பன் திருநாள் (2014 ) தொடக்க நாள் நிகழ்ச்சி
அரங்கில் கம்பன் அடிசூடி, முனைவர் சாரதா நம்பியாரூரன், நீதியரசர், டால்பின் அவர்கள், மற்றும் சச்சிதானந்தம், லட்சுமி (சிங்கப்பூர்)
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி


காரைக்குடி கம்பன் திருநாள் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. இதனுடன் இணைந்து நடத்தப்பெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கம் (துறைதோறும் கம்பன் ) பேராளர்களின் பெருத்த வரவேற்புடன் நடந்து முடிந்தது அ்தன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு




இந்த மூவர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்


 அரங்கக் காட்சிகள் 



 அமிழ்தினும் இனிய அறுசுவை உணவு


நிறைவு விழா







Thursday 6 March 2014

காரைக்குடி கம்பன் திருநாள் அழைப்பு (2014 )

 
 
 
உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கின்  அழைப்பும்  கம்பன் திருநாள் அழைப்பும் இதனுடன் வருகின்றன. அன்புடன் அனைவரும் வருக.