Wednesday, 4 December 2019

ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ஆறு ஏழு எட்டு ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கருக்கான ஒப்பித்தல் போட்டி ஜனவரி நான்காம் தேதி நடைபெற உள்ளது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி மாணாக்கர்களும் கலந்து கொள்ளலாம். அறிவிப்பும் பாடலும் கீழே இணைப்பில் உள்ளது வருக கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்



அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி


காரைக்குடி கம்பன் கழகத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 4 1 20 அன்றுகாரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் இரண்டரை மணிக்கு நடைபெற உள்ளது கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

Tuesday, 30 July 2019

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் 28.7.2015 அன்று கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா நடைபெற்றது. இதில் காப்பியக் கவிஞர் நா. மீனவன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. மேலும் சாகித்திய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற திருமதி தேவி நாச்சியப்பன் அ்வர்களுக்கும் சிறப்பு செய்யப்பெற்றது.

Friday, 25 January 2019


திரு. மணிமாறன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியின்  முன்னாள் முதல்வரும்,  ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவரும், சிறந்த பேச்சாளரும் ஆகிய  பேராசிரியை
திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்களின்
கணவர் திரு மணிமாறன் அவர்கள்
அண்மையில் காலமானார்.
        பேராசிரியையின் கல்வி, இலக்கிய, சமுதாயப் பணிகளுக்கு எப்போதும் துணைநின்ற அன்னாரின் மறைவு  இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.
        அவரது மறைவால் துயருரும் அன்னாரின் குடும்பத்தாருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நீழலில் அமைதி பெற பிரார்த்திகிறோம்.
இவண்
கம்பன் கழகம்
காரைக்குடி